நாங்குநேரி சம்பவம் வேதனை அளிக்கிறது-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


நாங்குநேரி சம்பவம் வேதனை அளிக்கிறது-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x

நாங்குநேரி சம்பவம் வேதனை அளிக்கிறது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி

நாங்குநேரி சம்பவம் வேதனை அளிக்கிறது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

பேட்டி

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மகளிர் உரிமை தொகைபெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி திட்டத்தின் பயனை அனைவரும் அடைய அரசு முயற்சிக்க வேண்டும்.. அரசின் பல்வேறு நிபந்தனைகள் பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். முதியோர் உதவி தொகை கூட கிடைக்க வேண்டிய நபர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது. காரணம் திட்டத்தில் உள்ள விதிமுறைகளே என்பதனை அறிய முடிகிறது. எனவே அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக பயன் தரும் வகையில் காலமுறைகளுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வரஅரசு பரிசீலிக்க வேண்டும்.

பா.ஜ.க. அரசால் நியமனம் செய்யப்பட்ட கவர்னர்கள் தங்கள் வரைமுறைகளை மீறி அரசியல் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் மணிப்பூர் கலவரம், அரியானா சம்பவத்தை பற்றியோ வாய் திறக்க மறுக்கின்றனர். மணிப்பூர் கலவரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தன்னம்பிக்கை

மதிப்பெண்களும், தேர்வு முடிவுகளும் நமது வாழ்க்கையினை முழுமையாக தீர்மானிக்க முடியாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். தேர்வுகளாலும், தேர்வு முடிவுகளாலும் மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்காக மாநில அரசு கவுன்சிலிங் மையம் அமைக்க வேண்டும். அதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தி வாழ்க்கையில் தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றவேண்டும். சாதி என்பது இந்தியாவின் சாபக்கேடு. நாங்குநேரியில் நடந்த சாதிய வன்முறை தாக்குதல் சம்பவம் வேதனை அளிக்கிறது. அதனை அரசோடு அனைத்து சமுதாய அமைப்புகளும் சேர்ந்து அந்த மனப்பான்மையினை அகற்ற பாடுபட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

பேட்டியின்போது மாங்குடி எம்.எல்.ஏ., நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story