நாங்குநேரி சம்பவம்: முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்


நாங்குநேரி சம்பவம்: முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்
x

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் சின்னத்துரை, அவரின் தங்கை சந்திராசெல்வி ஆகியோர் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து நாங்குநேரி சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் துறைரீதியான முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ராசு அறிக்கையை தாக்கல் செய்தார்.

பள்ளியில் மாணவருக்கு நேரிட்ட சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது சகோதரியை விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story