நாங்குநேரி சம்பவம் - பட்டியலின ஆணையம் ஆய்வு


நாங்குநேரி சம்பவம் - பட்டியலின ஆணையம் ஆய்வு
x

பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட இடத்தில் பட்டியலின ஆணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவனை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் செல்போனில் பேசி ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட இடத்தில் பட்டியலின ஆணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மாணவன் வெட்டப்பட்ட இடத்தில் பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



Next Story