நடராஜபெருமானுக்கு மகா அபிஷேகம்


நடராஜபெருமானுக்கு மகா அபிஷேகம்
x
தினத்தந்தி 26 Jun 2023 9:51 PM IST (Updated: 27 Jun 2023 2:35 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே ஸ்ரீநடராஜர் சிவகாமியம்மாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

திருப்பூர்

ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே ஸ்ரீநடராஜர் சிவகாமியம்மாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை, திருவோணம், ஆனி, உத்திரம், மார்கழி, திருவாதிரை ஆகியநட்சத்திர நாட்கள், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதிகளில் மஹா அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆனி உத்திரம் நாளான நேற்று சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், உள்பட 32 வகையான திரவியங்களால் நடராஜர் சமேத சிவகாமிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து செண்பகப்பூ, தாமரை மாலை, வில்வமாலைகளால் சாமி அலங்கரிக்கப்பட்டு மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்ச புராண கூட்டு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சேவூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story