தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் மாநாடு


தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் மாநாடு
x
தினத்தந்தி 16 Sept 2023 1:00 AM IST (Updated: 16 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் மாநாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கோயம்புத்தூர்
வடவள்ளி


கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் மையம் ஆகியவை சார்பில் 37-வது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் மாநாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


இதில் இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் முழுநேர உறுப் பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த், விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணைய தலைவர் விஜய்பால் சர்மா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் சமயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, உற்பத்தி செலவுகளை குறைப்பது, சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் பிரச்சினை கள் குறித்து மாநாட்டில் விவாதித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


பொதுவாக எந்த பொருட்களின் விலை உயர்கிறதோ அதை அதிகளவில் விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இதனால் சில மாதங்களுக்கு பிறகு அந்த பொருளின் விலை குறையும் போது நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தேவைகளுக்கு ஏற்ப மற்றும் நஷ்டம் ஏற்படாதவாறு விவசாயிகள் பயிர்களை விளைவிக்க வேண்டும். தென்னை மரங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கி நோயில் இருந்து காப்பாற்றி வருகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.



Next Story