டெல்லியில் தேசிய நடன போட்டி; தூத்துக்குடி மாணவ-மாணவிகள் தகுதி

டெல்லியில் நடக்கும் தேசிய நடன போட்டிக்கு தூத்துக்குடி மாணவ-மாணவிகள் தகுதி பெற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
மும்பையில் நடந்த தென்னிந்திய அளவிலான நடனபோட்டிகளில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாணவர்கள் டெல்லியில் நடக்கும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மும்பையில் 2-வது இண்டியன் ஹிப்ஹாப் சாம்பியன்ஷிப் நடன போட்டிகள் நடந்தன. இதில் இந்தியாவில் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தில் இருந்து 3 அணிகள் கலந்து கொண்டு குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்துள்ளனர். தமிழக அணியில் தூத்துக்குடி கிரிட்டி டான்ஸ் ஸ்டூடியோ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட இவர்கள் டெல்லியில் நடக்கும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு நடன பள்ளி தாளாளர் மாஸ்டர் விஜய் சான்றிதழ் வழங்கினார்.
Related Tags :
Next Story