பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்தார்


பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்தார்
x
தினத்தந்தி 2 July 2022 11:07 AM GMT (Updated: 2 July 2022 11:09 AM GMT)

திரவுபதி முர்முவை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்துள்ளனர்.

சென்னை,

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர் நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக எம்,எல். ஏ க்கள், எம். பி க்கள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாமக, தேமுதிக, த.மா.கா, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

திரவுபதி முர்முவை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது.


Next Story