18 ஆயிரம் வீடுகளுக்கு தேசிய கொடி

கிருஷ்ணகிரியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு தேசிய கொடியை நகராட்சி தலைவர் வழங்கினார்.
நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக் கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளில் உள்ள 18 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இலவசமாக தேசியக்கொடி வழங்கும் பணியை நேற்று நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சி உட்பட்ட ஜக்கப்பன் நகர் ஆட்டோ ஸ்டாண்ட், அப்பகுதியிலுள்ள கடைகள், வீடுகள் தோறும் தேசியக்கொடியை அவர் வழங்கினார். மேலும் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் சிவகுமார், கவுன்சிலர்கள் சுனில்குமார், மதன்ராஜ், பிர்தோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.