அன்னவாசல் பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை

அன்னவாசல் பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியது.
புதுக்கோட்டை
வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுவார்கள். இதையொட்டி இந்திய அஞ்சல் துறை அனைத்து தபால் நிலையங்கள் மூலமாக தேசியக்கொடி விற்பனையை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக அன்னவாசல் அஞ்சலகம் சார்பில் அன்னவாசல் பகுதிகளில் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.25-க்கு தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதனை பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Related Tags :
Next Story






