தேசிய பெண் குழந்தைகள் தின விழா


தேசிய பெண் குழந்தைகள் தின விழா
x
தினத்தந்தி 27 Jan 2023 6:45 PM GMT (Updated: 27 Jan 2023 6:47 PM GMT)

பொள்ளாச்சி அரசு பள்ளிகளில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு பள்ளிகளில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

பெண் குழந்தைகள் தினம்

பொள்ளாச்சி அருகே உள்ள கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் சத்தியா நாட்டின் வளர்ச்சியிலும், அறிவியல் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கிய பெண்கள் குறித்து பேசினார். பெண் சக்தி என்ற தலைப்பில் மாணவி இனியா சுகந்தி கவிதை வாசித்தார். விழாவில் உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த இந்திய பெண்களின் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பெண் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி உரிமை, பாலின பாகுபாடு அகற்றுதல் போன்றவை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தினகரன் செய்திருந்தார்.

பெத்தநாயக்கனூர்

பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர், அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழா தேசிய பசுமைப்படை சார்பில் மரம் நடும் விழாவாக நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பூமிக்கு மரமே ஆதாரம். அதேபோல உலகுக்கு பெண் குழந்தைகளே ஆதாரமாக உள்ளனர் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகள் வேம்பு, புங்கை, அரசமரம், நாவல் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர். இதில் பசுமைப்படை பொறுப்பாளர் ஆசிரியர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story