மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இடமாற்றம்


மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இடமாற்றம்
x
தினத்தந்தி 2 Jun 2023 3:14 PM IST (Updated: 2 Jun 2023 3:24 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இடமாற்றம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.

இனி வரும் காலங்களில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியிலும் மாதத்தின் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும் முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 போன்றவற்றுடன் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story