தேசிய அளவிலான சிலம்ப போட்டி


தேசிய அளவிலான சிலம்ப போட்டி
x

தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

திருச்சி

தேசிய அளவிலான சிலம்ப போட்டி திருச்சி, கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அசாம், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒற்றைக்கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வாள்வீச்சு, சிலம்ப சண்டை, அலங்கார வரிசை, மான்கொம்பு, வேல்கம்பு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டிகளை சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தொடங்கி வைத்தார். போட்டிகளின் முடிவில் தமிழக அணி அதிக பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. 2-வது இடத்தை கோவா அணி பிடித்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்-வீராங்கனைகள் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெற்காசிய மற்றும் ஆசிய சிலம்ப போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் கூறுகையில், 'நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்ப கலையை பள்ளி, கல்லூரிகளில் கட்டாய பாடமாக்க வேண்டும். மேலும் சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கும், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாகவும் ஊக்கத்தொகை வழங்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கிறேன்' என்றார்.


Next Story