தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்


தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் கோவையில் நடைபெற்றது. இதில் கோவை வீரர் முதலிடம் பிடித்தார்.

கோயம்புத்தூர்

கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் கோவையில் நடைபெற்றது. இதில் கோவை வீரர் முதலிடம் பிடித்தார்.

மோட்டார் சைக்கிள் பந்தயம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கோவை சிங்காநல்லூரில் உள்ள விஜய பியர் மைதானத்தில் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியை தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-ற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

பரிசளிப்பு விழா

தொடர்ந்து நேற்று மாலை வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி தலைமை தாங்கினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார்.

பந்தயத்தில் பாரீன் மோட்டார் 1 பிரிவில் கேரளாவை சேர்ந்த அமல்வர்கீஸ் முதலிடம், பெங்களூரை சேர்ந்த பிரஜூவால் 2-ம் இடம், கார்நாடகாவை சேர்ந்த ஜின்ரா 3-ம் பிடித்தனர். புரோ எக்ஸ்பெர்ட் மோட்டர் பிரிவில் கோவை வீரர் கரன்குமார் முதலிடம், பெங்களூர் வீரர்கள் அருன் 2-ம் இடம், சச்சின் 3-ம் இடம் பிடித்தனர். பந்தயத்தின் சிறந்த வீரராக கோவையை சேர்ந்த கரன்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இது தவிர இந்த போட்டியில் கலந்து கொண்ட 10-வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள், சிறந்த பெண் வீரர்கள் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தயாநிதி மாறன் எம்.பி. பேசும்போது,இளைஞர்களை அரசியலுக்கு ஈர்க்க வேண்டும் என்றால் அதற்கு சரியான துறை இந்த விளையாட்டுத்துறை. இங்கு தான் இளைஞர்கள் வருவீர்கள். அவ்வாறு வரும்போது திராவிட மாடல் சிந்தனைகளை உங்களுக்கு நாங்கள் சொல்கின்ற ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

ஏன் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்ற கருத்து உங்கள் மனதில் வரும், என்பதற்காகவே கழக தலைவர் தமிழக முதல்வர் விளையாட்டு மேம்பாடு அணியை உருவாக்கி உள்ளார் என்றார்.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி.நாகராஜ், சிங்கை ரவிச்சந்திரன், சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story