தேசிய தியாகிகள் நினைவு தினம்: சென்னை ஐகோர்ட்டில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,
இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'தேசிய தியாகிகள் நினைவு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி மறைந்த தினமான ஜனவரி 30-ந்தேதி ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி தேசிய தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கான மணி அடித்தவுடன் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள், வழக்குக்காக வந்தவர்கள், காவல்துறையினர் என அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story