தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்- கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள்! பஞ்சாயத்து ஆட்சிமுறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் போன்ற நமது கலாசார பாரம்பரிய கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியமாக உள்ளன. இன்று, பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன.இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story