தேசிய மக்கள் நீதிமன்றம்


தேசிய மக்கள் நீதிமன்றம்
x

விழுப்புரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். மாவட்ட நீதிபதி சந்திரன் வரவேற்றார். குடும்பநல நீதிபதி தேன்மொழி, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்புநீதிபதி வெங்கடேசன், தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, சிறப்பு சார்பு நீதிபதிகள் பிரபாதாமஸ், திருமணி ஆகியோர் விளக்கஉரையாற்றினர். அரசு வக்கீல்கள் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எஸ்.நடராஜன், வக்கீல்கள் சங்க தலைவர்கள் தயானந்தம், ஸ்ரீதர், நீலமேகவண்ணன், அரசு குற்றவியல் உதவி இயக்குனர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முகாமில் குற்றவியல் வழக்குகள், குடும்பநலம், சிவில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வராக்கடன் என மொத்தம் 3,578 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 16 பென்ஞ்ச்சுகளில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 600 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.22 கோடியே 84 லட்சத்து 93 ஆயிரத்து 58-க்கு பைசல் செய்யப்பட்டது.


Next Story