தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,701 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,701 வழக்குகளுக்கு தீர்வு
x

கடலூர் மாவட்டத்தில் நடந்த தேசியமக்கள் நீதிமன்றத்தில் 2,701 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கடலூர்


டெல்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுரையின் பேரில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார். நீதிபதிகள் சுபா அன்புமணி, உத்தமராஜ், எழிலரசி, பிரபாகர், பஷீர், மோகன்ராஜ், அனுஷா, கமலநாதன், வனஜா, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கடலூர் மாவட்ட பார்அசோசியேஷன் தலைவர் துரை.பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமநாதன், செயலாளர் ராம்சிங் மற்றும் வக்கீல்கள், விபத்து காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், அரசு வக்கீல்கள், வங்கி மேலாளர்கள், நில எடுப்பு தாசில்தார்கள், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

2,701 வழக்குகளுக்கு தீர்வு

தொடர்ந்து இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 13 அமர்வுகளில் 7,784 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2,701 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.38 கோடியே 6 லட்சத்து 22 ஆயிரத்து 852 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.


Next Story