பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்


பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

பெரம்பலூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசமாக பேசி முடித்து கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் (சமாதானமாக செய்யக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக தீர்வு பெற ஓர் அரிய வாய்ப்பாக அமைய உள்ளது.

மேல்முறையீடு செய்ய முடியாது

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்று கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்று கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. இருதரப்பினருக்கும் வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் நாளை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது சம்பந்தமாக, நாள்தோறும் சமரச பேச்சுவார்த்தை நடத்த தனித்தனியாக நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டு பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


Next Story