அரசு ஆண்கள் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் 2 நாட்கள் ஆய்வு

அரசு ஆண்கள் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் 2 நாட்கள் ஆய்வு
x

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வு நாளை தொடங்குகிறது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வு நாளை தொடங்குகிறது.

தர மதிப்பீடு

கும்பகோணம் அரசு ஆண்கள் தன்னாட்சி கல்லூரியில் நாளை (புதன் கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தர மதிப்பீட்டு ஆய்வில் 'ஏ' தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் நாளை ஆய்வை தொடங்குகிறார்கள்.

உள்கட்டமைப்புகள்

அப்போது கல்லூரியின் அனைத்து உள்கட்டமைப்புகள், கற்றல் கற்பித்தல் மேம்பாடு, தேர்வு மதிப்பீடுகள், ஆசிரியர், மாணவர்கள் ஆராய்ச்சி விரிவாக்கம், மைய நூலகம், உடற்கல்வி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரிக்கு சிறப்பான தர மதிப்பீடு பெற தேவையான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமையில் என்.ஏ.சி.சி. ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம், உள் தர நிர்ணய குழு ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் மேற்கெர்ணடு வருவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Next Story