தேசிய தர சான்று குழு ஆய்வு


தேசிய தர சான்று குழு ஆய்வு
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 AM IST (Updated: 8 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர சான்று குழு ஆய்வு நடத்தியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர சான்று குழு ஆய்வு நடத்தியது.

அரசு ஆஸ்பத்திரி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேசிய தர சான்று கிடைத்தது. இந்த நிலையில் மீண்டும் தேசிய தர சான்று பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று தேசிய தர சான்று குழுவினர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவை சேர்ந்த டாக்டர்கள் ரேஷ்மி (கேரளா), விசாலானி (தெலுங்கானா), சந்தியா(அரியானா), சவுத்திரி(மேற்கு வங்காளம்) ஆகியோர் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.

நாளை வரை

இதுகுறித்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:-

கடந்த முறை தேசிய தர சான்று கிடைத்தபோது, ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி பெறப்பட்டது. இதை கொண்டு ஆஸ்பத்திரியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. தற்போது 2-வது முறையாக தேசிய தர சான்றுக்கு ஆய்வு நடந்து உள்ளது. நேற்று (இன்று) முதல் நாளை (புதன்கிழமை) வரை ஆய்வு நடக்கிறது.

ஆண்டுக்கு ரூ.45 லட்சம்

முதல் நாளில் குழந்தைகள், மகப்பேறு, அவசர சிகிச்சை, ஆய்வகம், அறுவை சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் உள்ள 19 பிரிவுகளிலும் ஆய்வு நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 70 சதவீதம் மதிப்பெண்களும், ஆஸ்பத்திரிக்கு ஒட்டுமொத்தமாக 70 சதவீத மதிப்பெண்களும் கிடைக்க வேண்டும். தேசிய தர சான்று கிடைத்தால் ஆண்டுக்கு ரூ.45 லட்சம் கிடைக்கும். இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிகள் தேசிய தர சான்று ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story