தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்


தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
x

தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் நடந்தது.

கரூர்

தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் வெண்ணைமலை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 12-ந்தேதி (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) நடைபெற உள்ளது. அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை முடித்து இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ- 2, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (சி.ஓ.இ. தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உள்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுனர்களாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுனர்களின் வெட்புலத்தினை நிறைவு செய்திடும் பொருட்டு உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுனர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.மேலும் விவரங்களை அறியும் பொருட்டு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைமலை, கரூர் என்ற முகவரியில் நேரிலும் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story