நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்


நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
x

ஏனாதி அரசு உயர்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி அரசு உயர்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. முகாமில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு போதைப்பொருள், உணவு கலப்படம் பற்றிய விழிப்புணர்வு, டெங்கு ஒழிப்பு, பள்ளி வளாகம் தூய்மை பணி, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். இந்த முகாமிற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி வரவேற்றார். ஏனாதி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர் தலைமை தாங்கினார். ஏனாதி ஊராட்சி மன்ற தலைவர் தீபிகா சுதாகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிந்தியா, பட்டுக்கோட்டை நகர் மன்ற உறுப்பினர் மகாலட்சுமி உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார், முதுகலை ஆசிரியர் பரிமளா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story