நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கம்


நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கம்
x

இரும்பேடு கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடங்கியது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இரும்பேடு கிராமத்தில் அரிகரன் நகரில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடந்தது.

தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை தாங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ்பாபு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரஸ்வதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வெங்கட்ராமன், மாவட்ட நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் ஜோசப் பிரடரிக் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

முகாமில் பள்ளியை தூய்மை செய்வது, கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளுதல், பள்ளி மாணவர்களிடம் கண் தானம் விழிப்புணர்வு, உணவு பாதுகாப்பு, வங்கி சேமிப்பு, வேலைவாய்ப்பு, வேளாண்மை சிறப்பு, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் என பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெறுகிறது.

இந்த முகாம் வரும் 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.


Next Story