அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 Jun 2023 7:30 PM GMT (Updated: 19 Jun 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஆனி மாத அமாவாசைக்கு பின்வரும் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களும் அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்டவராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவையொட்டி வராஹி நவராத்திரி ஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று வருகிற 28-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு வகையான அலங்கார சேவைகள் நடைபெற உள்ளது. விழாவின் இறுதி நாளன்று அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்கார சேவையும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளது.


Next Story