சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா


சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பரதநாட்டியத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள கூத்தனூரில் சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது. இந்தியாவிலேயே கல்வி கடவுள் சரஸ்வதிக்கு தனியாக கோவில் கொண்ட ஒரே ஸ்தலம் கூத்தனூர் மட்டுமே ஆகும். இங்கு சரஸ்வதிதேவி வெண்பட்டு அணிந்து கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. முன்னதாக சரஸ்வதிக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் துர்கா பரமேஸ்வரி அலங்காரம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பரத நாட்டியத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு காப்பு கட்டுதல்நடைபெற்று விநாயகர் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story