கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா


கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா
x

கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா 15-ந் தேதி தொடங்குகிறது.

மதுரை

அழகர்கோவில்,

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த விழா வருகிற 15-ந் தேதி மாலையில் தொடங்குகிறது. இதையொட்டி அங்குள்ள கல்யாண சுந்தரவல்லி தாயார் சன்னதியில் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுந்தரவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 9 நாட்கள் நடக்கும் இந்த நவராத்திரி திருவிழா வருகிற 23-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதில் தினந்தோறும் மாலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் உள் பிரகாரத்திலேயே சுந்தரவல்லி தாயார் ஊஞ்சல் பல்லக்கில் தனித்தனி அலங்காரத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story