மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா


மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
x

குடியாத்தம் மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் அடுத்த தங்கநகர் அருகே உள்ள மீனாட்சியம்மன் நகர் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும், பக்தி சொற்பொழிவும் நடைபெற்றது. தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்த மீனாட்சியம்மனை தரிசனம் செய்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.தோன்றல்நாயகன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் எம்.கஜேந்திரன், கோவில் தர்மகர்த்தா பி.ஹேமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அமுலுஅமர், ஒன்றிய தி.மு.க. செயலாளர் நத்தம் பிரதீஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி நித்தியானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் டி.கே.இளங்கோ, ஜி.லிங்கசாரதி, ஏ.ராஜசேகர், பி.ஆறுமுகம், எஸ்.முரளிதரன், எம்.ஆர்.சீனிவாசன், எம்.கோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Next Story