நவராத்திரி விழா கொண்டாட்டம்
ஆற்காடு ஸ்மைல்ஸ் இந்தியா வித்யாஷ்ரம் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாட பட்டது.
ராணிப்பேட்டை
ஆற்காடு ஸ்மைல்ஸ் இந்தியா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைவர் ஜி.நந்தகுமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஹரிணிபிரியா, முதல்வர் மோகனவள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளி மாணவர்கள் நவதுர்கா தேவியின் 9 அவதாரங்களையும் வேடமணிந்து, அவர்களின் சிறப்புகள், பெருமைகள் குறித்தும், தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் விரதத்தை மாணவர்களிடம் எடுத்துக்கூறினர். மேலும் துர்கா தேவியின் பெருமைகளை வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் பாடி காட்டினர். விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story