"நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம்: நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம்: நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு 180 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துகள் குறைவான அளவில் இருந்தாலும் கூட விபத்துகளே இருக்க கூடாது என்று அரசு நடவடிக்கை எடுத்தது.

தற்போது தீக்காயத்தால் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் 17% அளவில் மட்டுமே தான் தீ காயம் எற்பட்டுள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த ஆண்டு தீபாவளியின் போது அதிக சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும். அதேபோல, வாடகை தாய் விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்ட செய்தி குறித்தும் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story