நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா தொடக்கம்

நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாசரேத்:
நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலய திருவிழா
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு. ேநற்றுமுன்தினம் காலை 5.40 மணிக்கு ஜெபமால திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, கொடி பவனி, கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. செய்துங்கநல்லூர் பங்குத்தந்தை ஜாக்சன் தலைமை தாங்கினார். தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜன் கொடியேற்றினார். சோமநாதபோரி பங்குத்தந்தை ஜெகதீஸ் மறையுரை ஆற்றினார். இதில் பிரகாசபுரம் சேகர தலைவர் தேவராஜன் மற்றும் பங்குத்தந்தைகள் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.40 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
அன்னையின் தேர்பவனி
வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை திருவிழா, மாலை ஆராதனை வடக்கன்குளம் அமலிவனம் ஜெபநாதன் தலைமையில் நடக்கிறது. கள்ளிகுளம் பனிமய அன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றுகிறார். இரவு 11 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
வருகிற 15ந் தேதி (திங்கட்கிழமை) 10-ம் திருவிழா அதிகாலை 3 மணிக்கு தேரடி திருப்பலி நடக்கிறது. காலை 8மணிக்கு திருவிழா திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் நடக்கிறது. தூத்துக்குடி நார்பட் மறையுரை ஆற்றுகிறார். காலை 11 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. அன்று மாலை 6.30மணிக்கு ஜெபமாலை, நற்கருணைபவனி சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் நடக்கிறது. பூச்சிக்காடு வசந்தன் மறையுரை ஆற்றுகிறார்.
ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் அருட்சகோதரிகள், விழாக்குழுவினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.






