என்.சி.சி. முகாம்


என்.சி.சி. முகாம்
x

கும்பகோணத்தில் என்.சி.சி.முகாம் நடந்தது

தஞ்சாவூர்

கும்பகோணம்

தேசிய மாணவர் படை சார்பில் ஆண்டுதோறும் டெல்லியில் டி.எஸ்.சி. என்ற முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 16-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க என்.சி.சி. மாணவர்களை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, திண்டுக்கல், பழனி, கரூர் போன்ற அனைத்து பட்டாலியன்களிலிருந்தும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, ஆயுதங்களை கையாள்வது எப்படி?, தடை தாண்டும் ஓட்டம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், சுத்தம், சுகாதாரத்தை பேணுதல் குறித்து வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு தேசிய மாணவர் படை அணியின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் மற்றும் நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியை பார்வையிட்டதோடு ஆலோசனைகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தேசிய மாணவர் படை சுபேதார் மேஜர் பிரைட் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் செய்திருந்தனர்.


Next Story