என்.சி.சி. மாணவர்கள் ரத்ததானம்


என்.சி.சி. மாணவர்கள் ரத்ததானம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலைநகரில் என்.சி.சி. மாணவர்கள் ரத்ததானம்

கடலூர்

அண்ணாமலைநகர்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் 4-வது தமிழ்நாடு கூட்டுத்தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி.யின் ஆண்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி என்.சி.சி. மாணவர்கள், கமாண்டிங் அதிகாரி வாசுதேவன் நாராயணன் சேனா மெடல் முன்னிலையில் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர்.

முகாமில் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் ராஜசேகர் மற்றும் பள்ளி, கல்லூரி என்.சி.சி. மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனர். கல்லூரி என்.சி.சி. அதிகாரிகள் மேஜர் சீமான், கேப்டன் ரவிச்சந்திரன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து ரத்த தான முகாமை நடத்தினார்கள். கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோய்க்குறியீட்டுத்துறை தலைவர் பேராசிரியர் கிருஷ்ணசாமி ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிதம்பரம் செஞ்சிலுவை சங்க இயக்குனர் இளங்கோவன் ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு பழச்சாறு வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் உதவி பேராசிரியர் வள்ளுவன், சமூக சேவகர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story