போடி அருகே தடுப்புச்சுவரில் ஜீப் மோதி 6 பேர் படுகாயம்


போடி அருகே  தடுப்புச்சுவரில் ஜீப் மோதி 6 பேர் படுகாயம்
x

போடி அருகே தடுப்புச்சுவரில் ஜீப் ேமாதி 6 பேர் படுகாயம் அடைந்தனர்

தேனி

இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 60). கூலித்தொழிலாளி. கடந்த 4-ந்தேதி இவர் குடும்பத்துடன் ஜீப்பில் சூரியநெல்லியில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றார். ஜீப்பை மதன் (45) என்பவர் ஓட்டினாா். இந்நிலையில் வேளாங்கண்ணி சென்றுவிட்டு போடி வழியாக சூரியநெல்லிக்கு ஜீப்பில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். துரைராஜபுரம் காலனி பகுதியில் நேற்று நள்ளிரவு வந்தபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக ஜீப் மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்த வடிவேல், அவரது மனைவி அந்தோணியம்மாள் (53), அன்சோபியா (5), பிரதீப் (31), மரியகிரேஸி மற்றும் டிரைவர் மதன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story