சென்னிமலை அருகேமொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


சென்னிமலை அருகேமொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x

சென்னிமலை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தார்கள்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தார்கள்.

நகை பறிப்பு

சென்னிமலை அருகே உள்ள தோப்புப்பாளையம் எம்.பி.என். காலனியை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 23). இவருடைய தாய் சாந்தி. இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி மொபட்டில் சென்னிமலை வந்துவிட்டு, பின்னர் ஊத்துக்குளி ரோடு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

மொபட்டை கவின்குமார் ஓட்டி சென்றார். சாந்தி பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர்கள் அருகே வந்து சாந்தியின் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை வெடுக்கென பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

இதுகுறித்து சாந்தி சென்னிமலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தார்கள்.

டிரைவர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னிமலை-ஈங்கூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்த கருப்புசாமி (வயது 31) என்றும், வேன் டிரைவராக வேலை பார்க்கும் இவர்தான் சாந்தியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கருப்புசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த நகையையும் மீட்டார்கள்.


Related Tags :
Next Story