சென்னிமலை அருகேகால்வாயில் விழுந்து தொழிலாளி சாவு
சென்னிமலை அருகே கால்வாயில் விழுந்து தொழிலாளி இறந்தாா்
சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் 5-வது குறுக்கு தெருவில் செல்லும் கால்வாயில் மூழ்கிய நிலையில் நேற்று ஆண் பிணம் கிடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர், 'சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி ராஜ மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பழனியப்பன் என்பவரின் மகன் விஜயகுமார் (வயது 50) என்பதும். இவர் சென்னிமலை அருகே சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் குடிபோதையில் அவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததும்' தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.