சின்னமனூர் அருகே கார் மோதி கல்குவாரி மேலாளர் பலி


சின்னமனூர் அருகே  கார் மோதி கல்குவாரி மேலாளர் பலி
x

சின்னமனூர் அருகே கார் மோதி கல்குவாரி மேலாளர் பலியானார்

தேனி

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்கலத்தூரை சேர்ந்தவர் அனுப் (வயது 32). இவர், சின்னமனூர் அருகே வனத்துறை குடியிருப்பு எதிரே உள்ள கல்குவாரியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ந்தேதி இரவு இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகே உள்ள தூக்குப்பாலத்திற்கு சென்றுவிட்டு சின்னமனூருக்கு வந்து கொண்டிருந்தார். காரை அனுப் ஓட்டினார்.

அப்போது பாளையம் புறவழிச்சாலையில் கோகிலாபுரம் விலக்கு பகுதியில் உள்ள நிழற்குடை அருகே காரை நிறுத்தினார். பின்னர் இயற்கை உபாதைக்காக அனுப் காரில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story