சோழவந்தான் அருகே தோட்டத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பலி


சோழவந்தான் அருகே தோட்டத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பலி
x

சோழவந்தான் அருகே தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தவறி விழுந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள அரசமரத்துப்பட்டி கிராமத்தில் ஏரவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி என்பவருக்கு தோட்டம் உள்ளது. இங்கு ஒரு தரையில் அமைக்கப்பட்ட தொட்டியில் தண்ணீரை தேக்கி வைத்திருந்தனர். அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஷ்ணு (வயது 11). இவன் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் விஷ்ணு அந்த தோட்டத்து வழியாக நடந்து சென்றான். அப்போது அந்த தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட தொட்டியில் அவன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவனை மீட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விஷ்ணுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக கூறினார்.

சோகம்

இதுகுறித்து செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் தோட்டத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட தொட்டியில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story