கூடலூர் அருகேதோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்:தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தன


கூடலூர் அருகேதோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்:தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தன
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

தேனி

கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை மலையடிவாரப் பகுதியை ஒட்டி உள்ள வெட்டக்காடு, எள்கரடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு வாழை, தென்னை சாகுபடி செய்துள்ளனர். விளைநிலங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவலுக்கு சென்று சத்தம் போட்டும், தகரங்களை தட்டி ஒலி எழுப்பியும் வன விலங்குகளை விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெட்டுக்காடு பகுதியில் பாண்டி என்பவருடைய தென்னந்தோப்பிற்குள் காட்டுயானைகள் புகுந்தன. அவை அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசப்படுத்தின. பின்னர் இரவு முழுவதும் அங்கேயே சுற்றித்திரிந்த யானைகள் அதிகாலை வனப்பகுதிக்குள் சென்றன. இதுகுறித்து பாண்டி வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்தார். வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.


Related Tags :
Next Story