தேவதானப்பட்டி அருகே நாய் கடித்து 5 பேர் படுகாயம்


தேவதானப்பட்டி அருகே  நாய் கடித்து 5 பேர் படுகாயம்
x

தேவதானப்பட்டி அருகே நாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் நடந்து சென்ற பார்த்தசாரதி (வயது 35), சபாபதி (28), சேட்டு (65) உள்பட 5-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்தது. இதில் அவர்கள் தப்பித்து அலறியடித்து கொண்டு ஓடினர்.

இதையடுத்து நாய் கடித்ததில் படுகாயமடைந்த அவர்கள் கெங்குவார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீ்ட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே அந்த பகுதியில் 2 வளர்ப்பு நாய்கள் மற்றும் ஆடுகளை நாய் கடித்து குதறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story