தேவதானப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் திருட்டு


தேவதானப்பட்டி அருகே  வியாபாரி வீட்டில் திருட்டு
x

தேவதானப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

தேவதானப்பட்டி. அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சித்திரவேல் (வயது 32) மாட்டு வியாபாரி. நேற்று இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இரவு வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ½ பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story