தேவதானப்பட்டி அருகேபருத்தி செடிகளில் அழுகல் நோய் பாதிப்பு


தேவதானப்பட்டி அருகேபருத்தி செடிகளில் அழுகல் நோய் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2023 6:45 PM GMT (Updated: 22 Jan 2023 6:45 PM GMT)

தேவதானப்பட்டி அருகே பருத்தி செடிகளில் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி

தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், பொம்மி நாயக்கன்பட்டி எருமலை நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சுமார் 400 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பருத்தி சாகுபடி செய்யப்பட்டு மகசூல் எடுக்கும் நிலையில் உள்ளது. இங்கு விளையும் பருத்திக்கு தேனி மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும். இதனால் இந்த பகுதி பருத்திக்கு கடும் கிராக்கி உள்ளது.

இந்நிலையில் நடவு செய்யப்பட்ட பருத்தி செடிகள் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் செடி நல்ல முறையில் வளர்ந்தது. தற்போது மகசூல் எடுக்கும் பருவத்தில் உள்ளது. மழை பெய்து அதிக அளவில் நிலத்தில் தண்ணீர் தேங்கி நிலம் காயாத காரணத்தினால் செடிகளின் வேர்கள் அழுகி முற்றிலும் காய்ந்து உள்ளது. இதனால் நோயை கட்டுப்படுத்த மருந்து தௌித்தும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story