ஈரோடு அருகே பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு


ஈரோடு அருகே பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 3:09 AM IST (Updated: 16 Jun 2023 7:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு

சோலார்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததை கண்டித்து ஈரோடு 46 புதூர் அருகே பச்சைபாளி ரோடு பகுதியில் இருக்கும் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க. அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கட்சி அலுவலகத்துக்கு வரும் நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story