கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கோபி அருகே உள்ள   கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு;  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொடிவேரி அணை

கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணைக்கு ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் வருவர். பின்னர் அவர்கள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள். மேலும் அங்குள்ள பூங்காவில் பொழுது போக்குவதுடன், கொண்டு வந்த உணவுப்பொருட்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து தாங்களும் உண்டு மகிழ்வர்.

குளிக்க தடை

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story