கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்;மாட்டு கொட்டகையை இடித்து தள்ளியது


கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்;மாட்டு கொட்டகையை இடித்து தள்ளியது
x

கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானை மாட்டு கொட்டகையை இடித்து தள்ளியது.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே செங்காடு, பூதிக்காடு, எரியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களையொட்டி வனப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று வெளியேறி இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, சோளம் போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து அங்குள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மாட்டு கொட்டகை பகுதிக்கு யானை வந்தது. பின்னர் அந்த மாட்டு கொட்டகையை யானை இடித்து தள்ளியது. இதில் மாட்டு கொட்டகை இடிந்து விழுந்தது.

இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்து யாைனயை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'கிராமத்துக்குள் காட்டு யானைகள் புகாதவாறு அகழிகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Next Story