கல்லாறு தூரிப்பாலம் அருகே நோய்வாய்ப்பட்ட காட்டு யானை தென்பட்டது-வீடியோ காட்சிகள் வைரல்


கல்லாறு தூரிப்பாலம் அருகே   நோய்வாய்ப்பட்ட காட்டு யானை தென்பட்டது-வீடியோ காட்சிகள் வைரல்
x

கல்லாறு தூரிப்பாலம் அருகே நோய்வாய்ப்பட்ட காட்டு யானை தென்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடல் பலவீனத்துடன் காணப்படும் காட்டு யானை ஒன்று ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவது தெரிகிறது. கடந்த 17 நாட்களாக கோவை ஆனைகட்டி பகுதியில் நோய்வாய்ப்பட்ட யானையினை பிடித்து சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடந்த 17 நாட்களாக போராடி வரும் நிலையில் அந்த யானை நேற்று முன்தினம் ஆனைகட்டி பகுதியில் வனத்துறையினர் கண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதே யானை தான் கல்லாறு வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story