கவுந்தப்பாடி அருகே பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

கவுந்தப்பாடி அருகே பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடியை அடுத்த பி.மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரியாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி, சலங்கபாளையம் பேரூராட்சி, கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீடுவீடாக சென்று முத்து எடுத்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் பெரியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பல தரப்பட்ட பக்தர்கள் சேத்து வேஷம் போட்டும், மொட்டையடித்தும் தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையதுறை ஆய்வாளர் நித்யா, பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரி சடையப்பன் ஆகியோர் செய்திருந்தனர். இதையொட்டி கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






