கோபி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயில் கருகி பெண் பலி
கோபி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயில் கருகி பெண் பலியானாா்.
கோபி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் உடல் கருகி பெண் பலியானார்.
தீப்பிடித்தது
கோபி அருகே உள்ள பொம்மநாய்க்கன்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பலதா (வயது 56). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் புஷ்பலதா நேற்று முன்தினம் வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் புஷ்பலதா மீது தீ பற்றி எரிந்தது. மளமளவென பரவிய தீ அவர் உடல் முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவர் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார்.
பெண் சாவு
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் புஷ்பலதாவை மீட்டு் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி புஷ்பலதா நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது