கோவில்பட்டி அருகே பெயிண்டருக்கு கத்திக் குத்து;4 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி அருகே பெயிண்டரை கத்தியால் குத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே பெயிண்டரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டருக்கு கத்திக்குத்து
கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி பஞ்சாயத்து இந்திரா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ஸ்ரீ தீபன் (வயது20). பெயின்டர். சம்பவத்தன்று இவர் இதே பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 வாலிபர்கள் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அவரது தாய் கவிதா சம்பவ இடத்திற்கு ஓடிவருவதை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்ட கவிதா கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
4 வாலிபர்கள் கைது
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஸ்ரீதீபனை கத்தியால் குத்தி கொல்ல முயன்றவர்கள், இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் மகன் ஆகாஷ் (19), வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (19), கடலையூர் ரோடு பூரணம்மாள் காலனியைச் சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22), ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் அருண் பாரதி ( 19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.