லோக்கூர் அருகேரெயில் பாதையை ஒட்டிய வனப்பகுதியில் திடீர் தீதீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்

லோக்கூர் அருகே ரெயில் பாதையை ஒட்டிய வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம்
ஓமலூர்,
ஓமலூர் அடுத்த டேனிஸ்பேட்டை வனச்சரகம் லோக்கூர் வனப்பகுதி இடையே சேலம்-சென்னை ெரயில் தண்டவாளம் உள்ளது. நாளொன்றுக்கு சேலம் நோக்கியும், சென்னை நோக்கியும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ெரயில்கள், பயணிகள் ெரயில் மற்றும் சரக்கு ெரயில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் லோக்கூர்-டேனிஷ்பேட்டை ரெயில் பாதையில் தண்டவாளத்தை ஒட்டிய வனப்பகுதியில் காயந்த புல் சருகுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். இதனால் தண்டவாள பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தீயணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






