மயிலாடும்பாறை அருகேதோட்டத்தில் பதுக்கிய சாராய ஊறல் பறிமுதல்:விவசாயி கைது


மயிலாடும்பாறை அருகேதோட்டத்தில் பதுக்கிய சாராய ஊறல் பறிமுதல்:விவசாயி கைது
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

மயிலாடும்பாறை அருகே தோட்டத்தில் பதுக்கிய சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி

மயிலாடும்பாறை போலீசார் நேற்று முன்தினம் இரவு பொன்னன்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்டாரவூத்து செல்லும் சாலையோரத்தில் உள்ள பொன்னன்படுகை கிராமத்தை சேர்ந்த விவசாயியான சின்னன் (வயது 57) என்பவரின் தோட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டிற்குள் இருந்த அலுமினிய பாத்திரத்தில் சுமார் 20 லிட்டர் சாராயம் ஊறல் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கிடையே அங்கு வந்த சின்னன் போலீசாரை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு ஆபாச வார்த்தைகளால் பேச தொடங்கினார். மேலும் போலீசாருக்கு ெகாலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த சாராய ஊறலை கீேழ கொட்டி அழித்தனர். இதைத்தொடர்ந்து சின்னனை கைது செய்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் சாராய ஊறல் பதுக்கி வைத்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சின்னன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேக்கம்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story